ரயில் மூலம் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே காவல்துறையினர் பயணிகளின் உடமைகளை தீவிர தணிக்கைக்கு உட்படுத்தினர்


பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவும் பரிசு பொருட்கள் வழங்கவும் வேட்பாளர்கள்  திட்டமிட்டுள்ள தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.அதனை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை கொண்டு தேர்தல் பறக்கும் படை அமைத்து அனைத்து வாகனங்களையும் தீவிர தணிக்கை செய்து வருகின்றனது.

இதனிடையே சோதனைகள் குறைவு என்பதால் ரயில் மூலம் பணம் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோவை ரயில்நிலையத்தில் காவல்துறையினர் பயணிகளின் உடமைகளை தீவிர தணிக்கைக்கு உட்படுத்தினர்.மேலும் ரயில்நிலையத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பயணிகளின் பைகளை முழுவதும் சோதனையிட்ட பிறகே அவர்களை ரயில் நிலையத்திற்குள் அனுமதித்தனர்.

Related Posts