ராகுல் காந்தி, 6000 ரூபாய் உதவித் திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது:மு.க.ஸ்டாலின்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை திமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் 6000 ரூபாய் உதவித் திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறிய அவர், பொய் வாக்குறுதிகளை அளிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார்.

(பைட்)

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறிய அவர்,  ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Related Posts