ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை அணியின் ராயுடு, வாட்சன், ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சுரேஷ் ரெய்னாவும், அதிரடியாக விளையாடிய தோனியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எதிரணியின் பந்துகளை தோனி பவுண்டரிகளுக்கு விரட்டியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. தோனி 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் அணியில் ராகுல் திரிபாதி 39 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Related Posts