மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் இன்று பிரச்சாரம்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திமுக மற்றும் அதிமுக  தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் இன்று தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். மதியம்  2.30 மணிக்கு தனியார் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் ராஜ்நாத் அங்கிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் பெரம்பலூர் செல்கிறார். 

பெரம்பலூரில் மாலை நடைபெறும் பிரசார பொதுக்
  கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து பேசுகிறார். அதை தொடர்ந்து மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியனை ஆதரித்து  ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்  கலந்து கொள்ள உள்ளனர்.

Related Posts