1ஆம் எண் புயல் எச்சரிக்கை

 கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

     வங்ககடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் சீற்றமாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகை, கடலூர், புதுச்சேரி, எண்ணூர், காரைக்கால், தூத்துக்குடி,  உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Posts