1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக புதிய சீருடை

1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக புதிய சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு தொடங்கியது என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்து வருகிறார், இந்நிலையில், சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பை துவங்கி  வைத்து பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கப்படும் எனவும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த புதிய சீருடைகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனவும், மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Related Posts