1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இன்று தொடங்கின.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளிலும் இன்று தொடங்கி வரும் 13ம் தேதி வரை மூன்றாம் பருவ தேர்வுகள் நடைபெறுகின்றன.

மக்களவை தேர்தலையொட்டி இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மூன்றாம் பருவ தேர்வுகள் தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 1 முதல் 12ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 13ம் தேதி வரை 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ தேர்வுகள் நடைபெறுகின்றன.

Related Posts