1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்க  தமிழக அரசு ஆலோசணை

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டம் காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளியில் சத்துணவில் முட்டை உட்பட  13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங்கலாமா என்று அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

. பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது  என்று உணவு ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே சத்துணவில் காய்கறிகள் முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் பால் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. நடைமுறையில் பாலை கெடாமல் பாதுகாப்பது சிரமமாக இருக்கும் எனபதால்  பால் பவுடரை வாங்கி கலந்து கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Related Posts