10 ஆண்டுகளுக்கு பின் தீவிர அரசியலில் சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்ப உள்ளார்.

2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சஞ்சய் தத், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். மும்பை வெடிகுண்டு சம்பவத்தில் சஞ்சய் தத் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்க மறுத்தது. இதைத் தொடர்ந்து சஞ்சய் தத் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்நிலையில் 60 வயதான சஞ்சய் தத் மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக மகராஷ்டிர மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ச்சித்துறை அமைச்சர் மகாதேவ் ஜங்கர் தெரிவித்துள்ளார். மகராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய சமாஜ் பக்‌ஷ் கட்சித் தலைவரான ஜங்கர், அடுத்த மாதம் 25-ந் தேதி சஞ்சய் தத் தங்கள் கட்சியில் இணைய உள்ளதாக கூறினார்.

Related Posts