10 ஆயிரம் மாணவர்களுக்கு  C A  பட்டய கணக்காளர் படிப்புக்கான பயிற்சி வழங்கப்படும்

பிளஸ்டூ முடித்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு  C A  பட்டய கணக்காளர் படிப்புக்கான பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-15

தென்னிந்திய மண்டல பட்டயக் கணக்காளர்களின் 6-வது மெட்ரோ மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் ப்ரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்திய்யாளர்களிடம்  பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஆடிட்டர்களுக்கு கூடுதல் அதிகாரம் பெற்றுத் தர தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

மேலும், பிளஸ்டூ முடித்த சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் அமைப்பின் உதவியுடன், பட்டய கணக்காளர் படிப்புக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts