10 நாட்களில் 148 கோடி வசூலித்த ’ரங்கஸ்தலம்’ படம்

 

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ரங்கஸ்தலம்’ படம் ரூ.148 கோடி வசூலித்துள்ளது.

ஏப்ரல்-11

தெலுங்கு திரையுலகத்தில் கடந்த மாதம் 30ம் தேதி வெளிவந்த படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ரங்கஸ்தலம். சமந்தா திருமணத்திற்கு பின் கதாநாயகியாக நடித்து வெளியாகியுள்ள முதல் படம் இதுவாகும். மித் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 1980களில் நடக்கும் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியான இப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் 101 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அமெரிக்காவில் 20 கோடி, கர்நாடகாவில் 14 கோடி, மற்ற இடங்களில் 13 கோடி என வெறும் 10 நாட்களில் ரூ.148 கோடி வசூலித்துள்ளது. ராம்சரண் கதாநாயகனாக நடித்து வெளியான படங்களிலே மகதீரா திரைப்படம் மட்டுமே ரூ.150 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில் தற்போது ரங்கஸ்தலம் படம் இன்னும் சில நாட்களில் அந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts