10 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்கள்: மத்திய அரசு திட்டம்

சென்னை – மைசூர், பெங்களூர் உட்பட 10 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால் உள்ளிட்ட வழித்தடங்களிலும் புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு  செய்துள்ளது. இத்திட்டத்திற்காக 10 லட்சம் கோடி ரூபாய்  முதலீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் சேவை வருகிற 2022ம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. முதல் கட்டமாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்கவும் மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில். புல்லட் ரயில் திட்டத்தை மேற்கொண்டு வரும் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், புல்லட் ரயிலுக்கான பெயரை தேர்வு செய்யவும், ரயிலின் மீது அமைக்கப்பட உள்ள அடையாள சின்னத்தை தேர்வு செய்யவும் தேசிய அளவிலான போட்டியை அறிவித்துள்ளது.

Related Posts