100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி  மினி மராத்தான் போட்டி: சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்

வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், தூத்துக்குடியில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.

இந்த மராத்தான் ஓட்டம் முத்துநகர் கடற்கரையில் இருந்து தொடங்கி  வ.உ.சி.கல்லூரியில் நிறைவு பெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவருடைய மனைவி அத்யசா நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, மாவட்ட உதவி ஆட்சியர் சிம்ரன் சிங், பயிற்சி ஆட்சியர் அனு, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சி ஆட்சியர் அனு,  மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்ப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

(பைட்)

இதே போல் திண்டுக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு மராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் வினய் தொடங்கி வைத்தார்.

 

Related Posts