ரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது

ரபேல் போர் விமான விவகாரத்தில், ரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்திய விமான படைக்கு வாங்குவது தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நே‌ஷனல் ஹெரால்டு இதழில் வெளியான கட்டுரை தொடர்பாக, அந்த இதழின் பதிப்பாளர் அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்  என்ற நிறுவனத்தின் மீது, ‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள சிவில் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், அந்த நாளிதழில் வெளியான கட்டுரை தங்கள் நிறுவனத்துக்கு களங்கமும் அவதூறும் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே 5  ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடுவழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து அடுத்த மாதம் 7–ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நே‌ஷனல் ஹெரால்டு நாளிதழ் நிர்வாகத்துக்கு நீதிபதி பி.ஜே.தமகுவாலா உத்தரவிட்டார்.

Related Posts