11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததையடுத்து, தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்டு 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Posts