ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ வணிகர்கள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

      நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதியளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மருந்துவ வணிகர்கள், மருந்து கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் சுமார் 550 மொத்தம் மற்றும் சில்லரை மருத்துவ வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மருந்து கடைகள் இயங்காது என மருத்துவ வணிகர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

      நெல்லை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்துகள் விற்பனை தடை செய்ய கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

      வேலை நிறுத்தப்போராட்டத்தால், பொதுமக்கள் பாதிக்காத வண்ணம், தமிழகத்தில், அரசு மருந்தகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

Related Posts