தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

ஈரான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரை மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீன் பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும்,தூத்துக்குடியைச் சேர்ந்த 1 மீனவரும், ஈரான் கடற்படையினரால், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். 6 பேரும் ஈரானில் உள்ள கிஷ் தீவில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும்,அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படுவதில்லை என தெரிய வந்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்வாதாரத்துக்காக துபாய் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த  தமிழக மீனவர்களின் விசாக் காலம் முடிவடைவதற்குள் அவர்களை மீட்டு உடனடியாக தாயகம் அழைத்து வரவேண்டும் எனவும், இது தொடர்பாகஈரானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் முத்ல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

 

Related Posts