கொட்டும் மழை: தொடரும் மீனவர்களின் போராட்டம்

டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மீனவர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 3ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வது என கடந்த 30-ந் தேதி நடைபெற்ற தமிழக  மீனவர் சங்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனிடையே, நாகை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கொட்டு மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

Related Posts