தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி மிக கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  தொடர் மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சில பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு,  விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கும், மதுரை மாவட்டம், மேலூரில் ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது..

Related Posts