குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க நினைக்கிறார் தினகரன்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பிரதமர் கூட தன்னை சந்திக்க தூதுவிட்டதாக தினகரன் சொல்லக் கூடும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், சுமார் 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 418 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழையை எதிர்கொள்ள  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், முதல் நிலை மீட்பு குழுவில் உள்ள 30 ஆயிரம் பேரும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களுக்கு வரும் புகழை தடுக்கவே டிடிவி தினகரன் இவ்வாறு கூறி வருவதாகவும், அதிகாரத்திற்காக பிரதமர் கூட தன்னை சந்திக்க தூதுவிட்டதாக தினகரன் சொல்லக்கூடும் எனவும் அவர் கூறினார். குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க தினகரன் நினைப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts