12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். ஏலத்திற்கு வரும் 346 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. ஏலத்திற்காக ஆயிரத்து மூன்று வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இதில் தங்களுக்கு தேவையான வீரர்கள் என்று அணி நிர்வாகங்கள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் பட்டியலை சமர்ப்பித்தன. இதன் அடிப்படையில் 346 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவற்றில் இருந்து70 வீரர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள். இதில் நியுசிலாந்தைச் சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம், கோரி ஆண்டர்சன்  இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன் இலங்கையைச் சேர்ந்த  மலிங்கா, மேத்யூஸ், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  ஷான் மார்ஷ், டார்சி ஷார்ட்,  தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காலின் இங்ராம்  ஆகிய 9 வீரர்களின் அடிப்படை ஏலத் தொகை .2 கோடியாகரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிக விலை பட்டியலில் எந்த இந்தியரும் இடம் பெறவில்லை. கடந்த ஏலத்தில் 11½ கோடி ?ருபாய்க்கு விலை போன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டின் அடிப்படை விலை 1½ கோடி ரூபாயாகும். தென்ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல், ஸ்டெயின், இங்கிலாந்தின் பேர்ஸ்டோ உள்ளிட்டோரை ஒன்றரை  கோடியில் இருந்தும், இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, தென்ஆப்பிரிக்காவின் அம்லா, டுமினி, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் ஆகியோரை தலா ஒரு கோடி ரூபாயிலிருந்தும்  ஏலம் கேட்கலாம்தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவின் தொடக்க விலை .75 லட்சம் ரூபாய் எனவும். மேற்கிந்திய தீவுகள் வீர்ர் இளம் வீரர் ஹெட்மயரின் தொடக்க விலை 50 லட்சம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts