18 சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் என அமைச்சர் பாண்டியராஜன்

18 சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டி மற்றும் மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு  மிதி வண்டிகளை வழங்கிய  அமைச்சர் பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 18 சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் எனவும்,கிராம நிர்வாக அலுவலர்கள் விவகாரத்தில் நல்லமுடிவை நிச்சயம் அரசு எடுக்கும் எனவும்தெரிவித்தார்.

இதேபோல் கரூரில் உள்ள அரசு மேல் நிலை பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 602 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்..இதை தொடர்ந்து,மாவட்ட மைய நூலகத்தில், பார்வை குறைபாடு உடைய மாற்று திறனாளிகள் படிப்பதற்கு பிரைய்லி மற்றும் கேட்பொலி வசதிகள் கொண்ட பகுதியை அமைச்சர் திறந்து வைத்தார்.

Related Posts