13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

 

 

 

13மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த வாரத்தில் இடி மின்னல், மழை மற்றும் சூறாவளி புழுதிப்புயலால் 124 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. இத்தகைய சூறாவளிப் புயல் மீண்டும் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று 13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கடுமையான வேகத்துடன் காற்று வீசும் என்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் இன்று பலத்த புழுதிப் புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Posts