1374 ட்ரோன்கள் மூலம் வானிலை வண்ண சாகசம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்

 

 

சீனாவில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 374 ட்ரோன் விமானங்களை பறக்கவிட்டு வானில் வண்ண சாகசம் நிகழ்த்தப்பட்டது, கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது.

சீனாவில் உள்ள சியான் நகரில் இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  1374 ட்ரோன்கள், வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து அழகிய ஒளி உருவங்களை உருவாக்கியவாறு பறந்தக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இதற்கு முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று 156 ட்ரோன் விமானங்களை பறக்க விட்டதும், தென்கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது 1218 ட்ரோன் விமானங்களை பறக்க விட்டதுமே சாதனையாக இருந்தது.  இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 1374  விமானங்களை பறக்க விட்டு முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

Related Posts