14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் அடுத்த இரண்டு  நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  மேலும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. வருகிற 18-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும்,  ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  மாலை அல்லது இரவில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Posts