14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுகோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமானது முதல் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் பிற்பகலில் மழை  கொட்டியது.

இதனிடையே, நேற்று நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts