ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது.

‘டாஸ்’ வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்த்து.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Posts