15வது ஒழுங்காற்றுக் குழு கூட்டம் : காவேரியின் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது

15வது ஒழுங்காற்றுக் குழு கூட்டம் சுமுகமான முறையில் நடைபெற்று முடிந்ததாக அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 15வது குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குழு தலைவர் நவீன் குமார், 15வது குழு கூட்டம் சுமுகமான முறையில் நடைபெற்று முடிந்ததாக தெரிவித்தார்.

காவேரியின் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு மழை மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இம்மாதத்தின் 3வது அல்லது 4வது வாரத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts