15 வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு : மத்திய அரசு

ஊழல் குற்றச்சாட்டு எழுந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர், மற்றும் இளநிலை மற்றும் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 15 அதிகாரிகளின் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Posts