150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்கபோட்டி

வேலூரில் நடைபெற்ற சதுரங்கபோட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

வேலூரில் சதுரங்க கழகத்தின் சார்பில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற வீர்ர்களுக்கு தொழிலதிபர் சுப்பிரமணிய சிவா கோப்பைகளையும் சான்றுகளையும் வழங்கினார். இவ்விழாவில் சதுரங்க சங்க செயலாளர் குமார், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts