17 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம்

மக்களவைத் தோ்தலையொட்டி, ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவா்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் புகார்களின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பெரும்பாலான காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தற்போது தோ்தல் நடத்தை நெறிமுறைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தாங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த பகுதிக்கு மாற்றறம் செய்யக் கோரி வந்தனா். இதை ஏற்று, 82 காவல் ஆய்வாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 17 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.

Related Posts