தைபே உயிரியல் பூங்காவில் பாண்டா ஜோடியின் 15வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தைவானில் உள்ள தைபே உயிரியல் பூங்காவில், பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா ஜோடியின் 15வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளையொட்டி ஐஸ்கட்டிகளால் செய்யப்பட்ட கேக் ஒன்றை பூங்கா நிர்வாகிகள் பாண்டாக்களுக்கு பரிசளித்திருந்தனர். பழங்கள், காய்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த கேக்கில், ஐஸ் கட்டிகளால் ஆன பலூன் மற்றும் குட்டி பாண்டா உருவங்களும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன.

மேலும் கரும்பினால் 15 என குறிப்பிடப்பட்டிருந்தது. பாண்டா ஜோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

2004ம் ஆண்டு பிறந்த பாண்டாக் கரடிகள் இரண்டும் சீனாவினால் 2008ம் ஆண்டில் தைவானுக்கு வழங்கப்பட்டன. அப்போது முதல் தைபேவிலுள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா ஜோடியில், பெண் பாண்டாவுக்கு யுவான் யுவான் எனவும், ஆண் பாண்டாவுக்கு டுவான் டுவான் என பெயரிடப்பட்டுள்ளது.

Related Posts