18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி

18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மக்களிடையே வாகனங்கள் வாங்கும் திறன் குறைவு, வாகனங்கள் உற்பத்தி துறையில் தனியார் முதலீடுகளும் சற்று குறைந்து காணப்படுவதும் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா முழுவதும் வாகன உற்பத்தி தொழிலில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்-VI ரக வாகனங்கள் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் தற்போது சந்தையிலுள்ள பிஎஸ்-IV ரக வாகனங்களின் விற்பனையை குறைவாகியுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் வாகன உற்பத்தியின் வளர்ச்சி மேலும் கீழுமாக இருந்துள்ளது. எனினும் கடந்த ஜூன் மாதத்தில் நிலவிய -19% வளர்ச்சியே மிகவும் குறைவான வளர்ச்சியாகும்.

கடந்த ஜூலை மாதம் முதல் தனியார் வாகன விற்பனை குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது வணிக ரீதியான வாகன விற்பனையும் குறைந்துள்ளது. வாகன பாகங்களின் ஏற்றுமதி 4 சதவிகிதமாக வளர்ந்திருந்தாலும் அவற்றின் மூலம் வரும் வருவாய் 5 சதவிகிதம் குறைந்துள்ளது.

Related Posts