18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் முகாம்

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை டி.டி.வி.தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஒன்றாகத் தங்கியிருக்கத் திட்டமிட்டு குற்றாலத்தில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர்.

                நேற்று முன்தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தீர்ப்பு வெளியாகும் வரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றாக தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இரவு முதல் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பழைய குற்றாலம் இசக்கி ஹைவியூ ரிசார்ட்டுக்கு தினகரன் ஆதரவாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். தங்க தமிழ்ச்செல்வன்,சுப்பிரமணியன், கதிர்காமு, பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, பிரபு, சுந்தர்ராஜ், உள்ளிட்டோர் வந்துள்ள நிலையில் மற்றவர்களும் வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts