18 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Want create site? Find Free WordPress Themes and plugins.

கஜா புயல் தாக்கத்தால் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல், 111கிலோ மீட்டர் வேகத்தில்  தமிழகத்தை தாக்கி, கரையை கடந்து வரும் நிலையில் உள்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.நாகப்பட்டிணம், கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, தஞ்சாவூர், திருப்பூர், சிவகங்கை, அரியலூர், விழுப்புரம், கரூர், சேலம்,திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts