18 மீனவர்கள் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

      பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் 18 பேர் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. அவர்களை, பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான 2 படகுகளை சிறைப்பிடித்துள்ளதாகவும், அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts