ஹாலிவுட் சினிமாவில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு, பல வீடியோக்களை சொந்தமாக உருவாக்கி, இன்ஸ்டாகிராம் பிரபலம் கெவின் லஸ்ட் கார்டன்  வலைத்தளவாசிகளை தொடர்ந்து அசரடித்து வருகிறார்.

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பிறந்த கெவின் லஸ்ட்கார்டனின் வீடியோக்கள், நாடு, மொழி பேதமின்றி உலகமெங்கும் உள்ள மக்களை அசரவைக்கின்றன. சமூக வலைத்தளங்களில், இவரது வீடியோக்கள், இதுவரை குறைந்தது 50 கோடி முறைகளுக்கும் அதிகமாக பார்வையிடப்பட்டு உள்ளன. மந்திரவாதிகள் மேடைகளில் செய்வதை, இணையத்தில் எடிட்டிங் துணையோடு செய்கிறார் இவர். ஆனால் இவரது வீடியோக்களில் எது உண்மை, எது எடிட் செய்யப்பட்டது என்று கண்டுபிடிப்பது சிரமம். இதனால் இவரது வீடியோவைப் பார்க்கும் யாரும் அதனை இரண்டாம் முறையாகப் பார்க்காமல் கடந்து போக முடியாது.

Related Posts