ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலை மீட்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டது.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நடராஜர் சிலையை சென்னை கொண்டு வர உள்ளார். சுபாஷ் கபூர் என்பவரால், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் கருவறை கதவை உடைத்து இந்த சிலை திருடப்பட்டது. நடராஜர் சிலையுடன் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகளும் 1982 ஜூலையில் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த நடராஜர் சிலைஆஸ்திரேலியாவில் உள்ள ஏ.ஜி.எஸ்.ஏ கேலரியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏ.ஜி.எஸ்.ஏ கேலரி பதிவாளர் ஜேன் ராபின்சன் நிதியுதவியுடன் விமானம் மூலம் நடராஜர் சிலை டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் மூலம் வெள்ளிக்கிழமை இந்தச் சிலை சென்னை கொண்டுவரப்படுகிறது. 700 ஆண்டு தொன்மையான நடராஜர் சிலையின் இன்றைய மதிப்பு 30 கோடி ரூபாயாகும்.

Related Posts