விமான நிலையத்தில் 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து திருச்சி வந்திறங்கிய ஏர் இந்தியா வமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, முகமது சுலைமான் என்பவரின் உடைமைகளை சோதனை செய்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் வந்திறங்கிய பஷீர் அகமதுவிடம் இருந்து 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 53 லட்சம் ரூபாய் என்றும், இது குறித்தும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Posts