2ஜி, ஏர்செல் வழக்குகளை நீதிபதி அஜய் குமார் அமர்வுக்கு மாற்றம்

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த, 2ஜி, ஏர்செல் வழக்குகளை, நீதிபதி அஜய் குமார் அமர்வுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மாற்றியுள்ளது.

2ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். எனவே இந்த வழக்குகளை நீதிபதி அஜய் குமார் தொடர்ந்து விசாரிப்பார் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை நீதிபதி அஜய்குமார் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts