2 ஆம் நாளாக வகுப்புக்களை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் 2 ஆம் நாளாக வகுப்புக்களை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுய நிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதை கைவிட வேண்டும் என தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இவர்களில் 11 பேரை கல்லூரி நிர்வாகம் 6 மாதம் இடைநீக்கம் செய்தது.

இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி  கருப்பு துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts