2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம்

நியூயார்க் நகரில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர்  2ம் தேதி அமெரிக்கா சென்றார். இந்நிலையில் நியூயார்க் நகரில் முதலமைச்தர் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Haldia Petrochemicals நிறுவனமும் தொழில் தொடங்க 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலம் தமிழகம் என்றும், தடையற்ற மின்சாரமும், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும் திறன்மிக்க மனிதவளமும் தமிழகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை மற்றும் பால்வள தொழில்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்க பயணத்தில் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts