2 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் – சந்திரசேகர ராவ் தாராளம்

சொந்த கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் 2வது முறையாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி  ஆட்சியை பிடித்துள்ளது. இவர் பிறந்த சிறிய கிராமமான சிந்தாமடகா கிராமத்தில் பிறந்து படித்து தற்போது கட்சியின் தலைவராகவும் முதல்வராகவும் சந்திரசேகரராவ் உயர்ந்துள்ளார்.

தன்னுடைய முன்னேற்றத்துக்கு துணையாக இருந்த கிராம மக்களுக்கு உதவும்  வகையில் சந்திரசேகர ராவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் கிராம மக்களின் வறுமையை போக்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் தலா  10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts