தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று முதலமைச்சர் பொய் கூறியுள்ளார்-எஸ் பி வேலுமணி

 

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என பொய் கூறிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று  மத்திய சென்னைதொகுதி மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக திமுக சார்பில்தொடர் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படிதமிழகம் முழுவதும் திமுகவினர்  இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில்  மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்தலைமையில் ஆர்ப்பாட்டம நடைபெற்றது.  இதில் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்பட  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் பேசிய தயாநிதிமாறன், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை  அதிமுக அரசு கடந்த 8 ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.மக்களுக்கு கொடுக்க தண்ணீர் இல்லாதபோது மது ஆலைகளுக்கு மட்டும் எப்படி தண்ணீர் கொடுக்க முடிகிறது என்று அவர்கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர்  பதவி விலக வேண்டும் என்று அவர் வலியிறுத்தினார்.

இதேபோல், கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் போக்கு ஒரு துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காவிரி கரையோர கிராமங்களில்  கூட குடிநீருக்காக காலி குடங்களுடன்  அலையும் அவல   நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

வரும் 28ம் தேதி தொடங்கும்  சட்டமன்ற கூட்டத்தொடரில் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சம் குறித்து குரல் எழுப்புவேண் என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அண்ணா திருவுருவ சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது,  தமிழக அரசின் கையாலாகத் தனத்தை கண்டித்தும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இதில். 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்பட  200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி மாணிக்கம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில்   சட்டமன்ற உறுப்பினர்கள் ராமசந்திரன், க.அன்பழகன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Posts