2-வது முறையாக மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

2-வது முறையாக பரோலை நீட்டிக்கக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, மகளின் திருமணத்துக்காக கடந்த ஜூலை 25 ஆம் தேதி ஒருமாத பரோலில் வந்தார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் தங்கியுள்ள அவர், அங்குள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். திருமண ஏற்பாடுகள் தாமதமாவதால்,பரோலை நீட்டிக்கக்கோரி நளினி முறையிட்டதால், 3 வார காலம் நீதிமன்றம் பரோலை நீட்டித்தது. இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதி வரை பரோலை நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மீண்டும் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியின் பரோலை 2வது முறையாக நீட்டிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்தது.

Related Posts