2 வாரங்களுக்கு ஓய்வெடுக்க உள்ளேன் – வைகோ

மருத்துவரின் அறிவுறுத்தலின்படி 2 வாரங்களுக்கு ஓய்வெடுக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ கூறியுள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று உடலில் சற்று அயர்வும், சோர்வும் ஏற்பட்டதாகக் கூறினார். தனது தனிப்பட்ட மருத்துவர் தணிகாசலத்தின் ஆலோசனைப்படி, மதுரை அப்பல்லோ மருத்துவமையில் பரிசோதனை செய்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்ற வெறித்தன்மையோடு மத்திய அரசு செயல்படுவதாக அவர் கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு சில அடிப்படை விஷயங்கள் புரிவதில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

Related Posts