20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் – வைகோ

கேரளா வெள்ள நிவாரண பணிகளுக்காக அம்மாநில முதல்வர் கோரிய 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜிக்கு கருப்புகொடி காட்டிய வழக்கில் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜாரான வைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிராக தொடர்ந்து 22 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார்.நேற்றைய தினம் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து நடைபெற்ற விசாரணையின் போது, ஆலைக்கு எதிராக வெளி மாநில  ஆட்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அரசியல் கட்சியினர் தூண்டுதலின்பேரில் போராட்டம் நடைபெற்றது எனவும் தவறான தகவல் கூறப்பட்டதாக தெரிவித்தார்.. அதற்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மக்கள் தாங்களாகவே நடத்திய போராட்டம் என்று விளக்கம் அளித்ததாக குறிப்பிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென்று ஆலை நிர்வாகம் எல்லா வகையிலும் முயற்சி செய்வதாக கூறிய வைகோ,  ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் தமிழகஅரசு சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டினார். ஸ்டெர்லைட் ஆலை குறித்த விசாரணை குழுவுக்கு தமிழக நீதிபதியை தலைவராக நியமிக்க கூடாது என்றும் வேற்று மாநில நீதிபதிகளை நியமித்துதான் விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் கூறுவது முறையல்ல என்று அவர்  தெரிவித்தார். கேரளா மழை  வெள்ளம் குறித்து பேசிய வைகோ, மிகவும் துக்கரமான நிகழ்வு என குறிப்பிட்டார்,.கேரளா வெள்ள நிவாரண பணிகளுக்காக அம் மாநில முதல்வர் கோரிய 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகையையொட்டி நெல்லை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Related Posts