200 அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்பை விசி வரும் கிளேயா எரிமலை

ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறிய கிளேயா எரிமலை 200 அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்பை விசி வருகிறது.

ஹவாய் : மே-31

கடந்த 3 ஆம் தேதி லாவா குழம்பை உமிழத் தொடங்கிய கிளேயா எரிமலை ஹவாய் தீவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆறாகப் பெருகி ஓடும் லாவா குழம்பு தற்போது பஹோயா என்ற இடத்தை கடந்து செல்லும் போது பூமியில் ஏற்பட்ட துளையின் காரணமாக 200 அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்பை உமிழ்ந்தது. எரிமலையில் ஏற்பட்ட புதிய வெடிப்பின் காரணமாக பஹோயா பகுதியில் காற்றில் கந்தக டை ஆக்ஸைடு வாயு அதிக அளவில் வெளியேறி வருவதால், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஹவாய் தீவு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts