2018-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி நடத்திய சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீ டு

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 குடிமையியல் பணிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், 2018ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது.  759 பேரை தேர்வு செய்துள்ள யுபிஎஸ்சி அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கனிஷாக் கட்டாரியா முதல் ரேங்க் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 5-ம் இடத்தையும், பெண்களை பொறுத்தவரை முதலிடத்தையும் மாணவி ஸ்ருதி ஜெய்ந்த் தேஷ்முக் பிடித்தார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட தண்டேவாடா பகுதியை சேர்ந்த நம்ரதா ஜெயின் 12-ம் இடம் பிடித்தார்.

Related Posts