2018-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு

2018-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஸ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் 3-வது பெண் விஞ்ஞானி என்ற பெருமையை டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் பெற்றுள்ளார்.

Related Posts